நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக ஜனவரி 21-ஆம் தேதியை பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.