சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணைய வழியிலான பி எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நான்காண்டு பட்டப்படிப்புக்கு வருகின்ற ஜூன் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர JEE நுழைவுத் தேர்வு தேவையில்லை. இதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.study.iitm.ac.in/es என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.