தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மின்சார சலுகைகளும் தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு குறைந்த அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி தொழில் மின் இணைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் வீட்டு மின் இணைப்பு கட்டணங்கள் குறைவு என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.