JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்று காலை ஜே இ இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் JEE அட்வான்ஸ்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. அதன்படி மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பிறகு ஜூன் நான்காம் தேதி இதற்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது