தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த நிலையில் சட்டப்பேரவையில் நீண்ட நேரம் ஆக முதலமைச்சர் விஜய் புகழ்ந்து பேசினார்.
#WATCH | முதல்வர் விஜயை புகழ்ந்து நீண்ட நேரம் கவிதை வாசித்த அமைச்சர் வினோத் –
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, வேளாண் பட்ஜெட்டை வாசிக்க அமைச்சருக்கு சபாநாயகர் அட்வைஸ்#SunNews | #TNAssembly | #TVKVijay | #TNAgriBudget pic.twitter.com/SRTMsAHtxB
— Sun News (@sunnewstamil) August 6, 2026
குறிப்பாக கோட் சூட் அணிந்த விவசாயி விஜய் என்றும் ஜனநாயகனாகிய நீங்கள் பணநாயகனை அழித்தவர் என்றும் அவர் கவிதை பாடி புகழ்ந்து தள்ளினார். பட்ஜெட்டை வாசிக்காமல் நீண்ட நேரம் முதல்வர் விஜய்யை அவர் புகழ்ந்து கொண்டே இருந்ததால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இதனைத் தொடர்ந்து சபாநாயகர் உடனடியாக அமைச்சர் வினோத்தை கண்டித்த நிலையில் முதலமைச்சர் பற்றி புகழ்ந்து பேசுவதை நிறுத்திவிட்டு பட்ஜெட்டை வாசிக்குமாறு அறிவுரை வழங்கினார்.
