சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தில் விலை சவரனுக்கு 2160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,10,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,000 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 10 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
