செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 15 நாட்களாக  நிலம் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறது. குறைப்பாக  நீங்க பார்த்தீங்கன்னா…  தமிழ்நாட்டுல இருக்கின்ற பல அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பணபலம் படைத்தவர்கள், நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்களை, புறம்போக்கு அரசு நிலங்களை ஆக்கிரமித்து வச்சிருக்காங்க.

சில இடங்களில் அதிகாரிகளை பயன்படுத்தி பட்டாவை வாங்கி,  இருக்கின்ற நிலைமை ஏற்படுது.  இன்னைக்கு பல தீர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இரண்டு தினங்களுக்கு முன்னால் வந்திருக்கின்ற தீர்ப்புல கோவை மாவட்டத்தில் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், அதேபோல பாஜகவினுடைய தலைவர் உத்தம ராமசாமி. இவங்க ரெண்டு பேரும் 45 ஏக்கருக்கு மேலே எப்படி வளைச்சி,  அதுல பில்டிங் கட்டி,  ரியல் எஸ்டேட் பண்ணியிருக்காங்க என்பதை நீதிமன்ற தீர்ப்பு சொல்லுது.

பாண்டிச்சேரியில் இருக்கின்ற 2 பாஜக எம்எல்ஏக்கள், அங்கு  நிலத்தை ஆக்கிரமிச்சி,  பட்டா வாங்கி இருக்காங்க என தீர்ப்பு சொல்லுது. இப்படி பல இடங்களில் இந்த மாதிரி அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பண பலம் படைத்திருக்கிறவர்கள், அரசு நிலங்களை ஒரு மூர்க்கத்தனமாக  ஆக்கிரமித்து,  அதிகாரிகளை கையில போட்டுக்கிட்டு…  அவங்க பட்டா வாங்கி அனுபவிப்பது சட்டவிரோதம் என்று சொல்லி இருக்கின்றது.

நீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்றாங்க என்றால் ? அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் செய்வது ஒரு வெறுக்கத்தக்க செயல், ஒரு அநாகரிகமான செயல். எனவே அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,  அந்த சொத்துக்களை மீட்பது என்பது மட்டுமல்ல,  இதற்கு உடந்தையாக உடன்பட்டு போயிருக்க கூடிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அந்த நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.