செப்டம்பர் மாதத்திலேயே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலே ஜிஎஸ்டி வரி வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிலேயே செப்டம்பர் மாதத்தில் 10,481 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் வசூல் செய்யப்பட்ட 8,637 கோடியை விட 21% அதிகம். அகில இந்திய அளவிலே 10% ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 21% அதிகரித்து இருக்கிறது. அதாவது தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக தமிழ்நாட்டிலேயே ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்திலேயே செப்டம்பர் மாதத்தில் 197 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் செய்யப்பட்ட 188 கோடியை விட 5% அதிகமாகும். பெரிய மாநிலங்களிலே தெலுங்கானாவில் 33 சதவீதம் வளர்ச்சி, மகாராஷ்டிராவில் 17 சதவீதம் வளர்ச்சி, சத்தீஸ்கர் மாநிலத்திலேயே 18 சதவீதம் வளர்ச்சி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் 15 சதவீதம் வளர்ச்சி என ஜிஎஸ்டி வரி வசூல் செப்டம்பர் மாதத்தில் கணிசமாக உயர்ந்து இருக்கிறது.

இந்த நிதியாண்டிலேயே நான்காவது முறையாக அகில இந்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1.6 லட்சம் கோடி கடந்துள்ளது. அதேபோலவே இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 11% ஜிஎஸ்டி வரி வசூல் உயர்வின் காரணமாக 9 லட்சத்து 92 ஆயிரத்து 58 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும் நிலையிலே, தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 1.6 கோடி லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுவது.

GST வரி வசூலுக்கு  2  காரணம் பார்க்கப்படுகிறது. ஒன்று தொழில் துறை வளர்ச்சி. உற்பத்தி துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது. ஆகவே தான் பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரிக்கிறது. அதே சமயத்திலேயே சேவைதுறையும் சிறப்பாக செயல்படுகிறது.

IT துறை போன்றவற்றில் ஏற்றுமதி தொடர்ந்து கணிசமான அளவாக இருந்து வருகிறது. இந்த இரண்டு முக்கிய காரணங்களால் தான் தமிழ்நாட்டிலேயே ஜிஎஸ்டி வரி வசூல் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.  அதை மட்டுமல்லாமல்,  நுகர்வோர் பொருட்களை ஆர்வத்துடன் வாங்குவதாகவும் தெரிகிறது. ஏனென்றால் தற்போது பண்டிகை காலம் வர இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலேயே பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த பல்வேறு காரணங்களால் தான் ஜிஎஸ்டி வரி வசூல் தமிழ்நாட்டிலே கணிசமாக உயர்ந்து இருக்கிறது.