கோலிவுட் திரை உலகின் பிரபல சன் மாஸ்டர் சூப்பர் சுப்புராயனின் மகன் திலீப் சுப்ராயன் மீது பிரபல instagram அழகி குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தெறி, புலி, வாரிசு போன்ற வெற்றி படங்களின் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர் திலீப் சுப்பராயன்.
இவர் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவுத்துள்ளதாவது, “என்னோட சாவுக்கு ஸ்டாண்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயன் மட்டும்தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். கடந்த ஆறு வருஷமாக அவர் கூட இருந்துள்ளேன். நிறைய பெண்களோடு பழக்கம் வைத்துள்ளார்.
அதை கேட்டபோது என்னை அடிக்கிறார். நானும் பொறுத்து, பொறுத்து என்னால தாங்க முடியல இதுவும் பதிவு செய்தால் என்னை அடி அடி என்று அடிப்பார்” என வேதனையுடன் வெளியிட்டுள்ளார். பின்னர் பூந்தமல்லி அடுத்த காட்டு பக்கத்தில் உள்ள இல்லத்தில் இலக்கியா அதிக அளவில் ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்போது போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இலக்கியா வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி கோலிவுட் திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலக்கியா வைத்த குற்றச்சாட்டு உண்மையானதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இதுபோன்று செய்துள்ளாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சினிமா துறையில் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.
