தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அவர் கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று நடித்து வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அப்படத்தை இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கினார். அப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் ஆனது.

அப்படத்தை தொடர்ந்து விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் கேப்டன் என்ற பெயர் நிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து அனைவரும் நடிகர் விஜயகாந்தை கேப்டன் என அழைத்தனர். அப்படம் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம்.

இந்நிலையில் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவரான கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இதனை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் திரையிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இப்படத்தை இன்றைய தலைமுறைகள் பார்க்கும் விதத்தில் நவீன 4K தொழில்நுட்பத்தில் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரது திரை பயண வாழ்க்கை நினைவுகளை நினைவு கூறும் வகையிலும் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறது தமிழ் சினிமா.