பிரபல பாடகர்களான திப்பு-ஹரிணி தம்பதியின் மகன் சாய் அபயங்கர். இவர் கட்சி சேர, ஆசை கூட உள்ளிட்ட இசை ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இ
தனை தொடர்ந்து சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் மார்ஷல் உள்ளிட்ட படங்களிலும் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். சாய் அபயங்கர் இசையில் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை. அப்படி இருக்கும் போது அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதே போல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த சர்ச்சைகள் குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி இரண்டு பேருமே திறமைசாலிகள் தான்.
லேட்டாக வந்தாலும் அவர் (சாம் சி.எஸ்ஐ குறிப்பிட்டு) நல்ல இடத்தில் இருக்கிறார். சிறிய இடைவெளியில் வந்தாலும் அவரும் (சாய் அபயங்கரை குறிப்பிட்டு) நல்ல இடத்தில் இருக்கிறார். இதை வரவேற்கத்தான் வேண்டும். ஏன் தப்பாக பார்க்க வேண்டும்? அப்படி பார்க்க வேண்டாம்.
மியூசிக் தெரியாமல் நான் இசையமைப்பாளராகவில்லையா? இதெல்லாம் அநியாயம் தானே? அப்படி இருக்கும்போது அவர்கள் ஏன் வரக்கூடாது? திறமை இல்லாமல் யாருமே நிலைத்து நிற்க முடியாது என இளம் இசையமைப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
