அஜாகரதையாகப் பாம்புகளுடன் மோதுவது உயிர் கொல்லும் செயல் என்று தெரிந்தும், ஒருவர் ஒரு பிரம்மாண்ட ராஜநாகத்துடன் (Python) சண்டையிடுவது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில், ஒரு வயலில் பெரிய ராஜநாகம் இருக்க, அதற்கு மிக அருகில் அந்த நபர் நிற்கிறார். ராஜநாகம் எப்போது வேண்டுமானாலும்த் தன்னைத் தாக்கலாம் என்று தெரிந்தும், அதை எதிர்கொள்ளத் தயார் நிலையில் அவர் காத்திருப்பது பார்ப்பவர்களின் நரம்புகளை முறுக்கேற்றியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

ராஜநாகம் அவரைத் தாக்க வரும்போது, அந்த நபர் மின்னல் வேகத்தில் அங்கிருந்துத் தப்பி விடுகிறார். இந்தச் சம்பவம் திடுக்கிட வைத்தாலும், ராஜநாகத்தின் தாக்குதலில் இருந்து அவர் சிறு காயம்கூட இல்லாமல் உயிர் பிழைத்தார்.

இருப்பினும், அவர் பயத்தில் அதிர்ந்து போனார். therealtarzann என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 39 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். “வனவிலங்குகளுடன் விளையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இது ஒரு சான்று” என்றுப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.