29 வயதானச் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு, அண்டார்டிகாவில் உள்ள மெக்முர்டோ நிலையத்தில் (McMurdo Station, Antarctica) 6 மாத ஆராய்ச்சிப் பணிக்கு, ரூ.1.31 கோடி (1,45,000 அமெரிக்க டாலர்) சம்பளத்துடன், தங்குமிடம், உணவு, விமானம் போன்ற அனைத்து வசதிகளுடன் ஒரு வேலை கிடைத்துள்ளது.

ஆனால், தனதுக் காதலியைப் பிரிந்து தனிமையில் ஆறு மாதங்கள் இருக்க வேண்டும் என்றக் குழப்பத்தில், அந்த வேலைக்குச் செல்லலாமா, வேண்டாமா என்று அந்த இளைஞர் ரெடிட் (Reddit) தளத்தில்ப் பதிவிட்டுள்ளார்.

கடுமையானப் பனிப்பாறைகள் நிறைந்த, மனிதர்கள் குறைவாக வாழும் ஒரு தனிமையானச் சூழலில், கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் வேலையைத் தனிமையில் வாழ்வதையும், காதல் உறவுப் பாதிக்கப்படுவதையும் நினைத்து அவர் அச்சப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பல ரெடிட் பயனர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். சிலர், “வெறும் 6 மாதங்களில் வாழ்க்கையே மாறலாம்; இது எதிர்காலத்துக்கு நல்லது” என்றும், வேறு சிலர், “இவ்வளவு நீண்ட தூரம் பிரிந்திருப்பது காதல் உறவுக்கு நல்லதல்ல” என்றும் மாறுபட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.