சீனாவின் செஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள ஹாங்சூ (Hangzhou) நகரில், போக்குவரத்துப் போலீசாருக்குப் பதிலாக “ஹாங்ஜின் எண்.1” (Hangjin No.1) என்றப் பெயருடைய ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோ (Traffic Cop Robot) சோதனை முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ, ஹை-டெஃபினிஷன் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் குரல் அமைப்பு போன்ற தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது.
🚨🇨🇳BREAKING: The Chinese city of Hangzhou just deployed an AI Traffic Cop Robot to manage intersections. pic.twitter.com/T4JUqv7GSg
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) December 2, 2025
இந்த ரோபோவானது, சாலைகளில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்குத் துல்லியமாகவும், தெளிவாகவும் போக்குவரத்து விதிகளைக் குறித்து நிகழ்நேர உத்தரவுகளை (Real-time instructions) வழங்குகிறது. ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டால், போக்குவரத்துப் போலீசாரிடையே இருக்கும் லஞ்சம் (Bribery) மற்றும் ஊழலைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஏனெனில், இந்த ரோபோக்கள் பயப்படவோ, களைப்படையவோ, பணம் வாங்கவோ செய்யாது என்பதால், விதிமுறைகள் கடுமையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைமுறைப்படுத்தப்படும். தற்போது, சாலை நடுவே நின்று வழிகாட்டுதல் மற்றும் குறுக்குச் சாலைகளில் வழிகாட்டுதல் என இந்த ரோபோ இரண்டு முறைகளில் செயல்படுகிறது.
