
மெயின் ரவுடி நான் இருக்கேன். என்னை போய் விசாரிக்காமல், நேரடியா எனக்கு ஒரு அழைப்பாணை போட்டு, ஏன்பா சீமான் இங்க வாப்பன்னு கூப்பிட வேண்டியது தானே…LTTE-க்கு பணம் கொடுக்கிறியா ? என்னையா LTTEல இதுல இருந்து தானே எனக்கே பணம் வருதுன்னு சொன்னிங்க… ரொம்ப நாளா சொன்னீங்க….
இப்ப நான் போய் கொடுக்கிறேனா ? சரி LTTE எங்கப்பா ? என்னத்தையாவது ஒன்னை சொல்லி மிரட்டுவது…. நம்மள பத்தி அவங்களுக்கு தெரியாது. அஞ்சுவதும், அடிபணிவதும் நம்ம பரம்பரைக்கே கிடையாது. எங்களை எல்லாம் உருவாக்கின தலைவன் பயம் என்பது கோழைகளின் தோழன் என்கிறார். அது வீரனுக்கு எதிரி என சொல்லுறாரு… அதனால் நாங்க எதுக்கு பயப்படணும்? நாட்டில் பல லட்சம் கோடி கொள்ளை அடிச்சு ஒதுக்கிப் பதுக்கி பதவியில் இருக்கறவனே பாதுகாப்பாக இருக்க, நாங்க நல்லவங்க…. நாங்க ஏன் பயப்படணும் சொல்லுங்க ? என தெரிவித்தார்.