
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குரங்கணியில் தீப்பிடிச்சு எரிஞ்சாலும், நீங்க வர மாட்டீங்க. ஓகி புயலில் செத்து மிதந்தாலும் தூக்க வரமாட்டீங்க. சாதாரண நீர், மழைக்கே என்னை நீ என்னை காப்பாத்த வர மாட்டேங்குறீயே…. அணு உலை வெடிச்சா அல்லது ஸ்டெர்லைட்ல பிரச்சனை என்றால், இந்த மாதிரி பேரிடர் வந்ததுனா…… இப்போ இந்த அமோனியா இருக்தே…. அது 12,000 எடை உள்ள டேங்க் நீ வச்சிருக்காங்க, கொள்ளளவு வச்சிருக்க…
அதுல 2000 தான் கசிஞ்சிருக்கு. 4000 டன்னு அதுல இருக்கு. ஒருவேளை அது மொத்தமாக வெளியேறி இருந்துதுனா….. மொத்த சென்னையும் முடிந்திருக்கும் தானே…. அப்ப நீங்க எங்கள பத்தி எதையுமே கவலைப்பட மாட்டேங்கறீங்க. நீங்க வேணும்னா வந்து பாருங்க…. அந்த குழாய், அம்மோனியா குழாய் 3 கிலோமீட்டர் கடலுக்குள்ள போகுது…. எவ்வளவு கவனக் குறைவா இருக்கு ? எல்லாமே பேட்ச் பேட்ச்சாக ஒட்டி இருக்கு.
இந்த குழாயிலேயே தரமற்று இருக்கு. அந்த குழாயே….. வீட்ல ஒரு நீர்க்கசிவு ஏற்பட்டால் குழாயை எப்படி சுத்தி வைப்பீங்களோ, அந்த மாதிரி இருக்கு. என்ன சொல்றாங்கன்னா…… ஒரு நல் வாய்ப்பாக தண்ணீர் உள்ளே கசிந்தால் பெரிய அளவுக்கு தாக்கம் ஏற்பட்டல. ஒருவேளை தண்ணி வத்தி இருக்கு… இப்ப நான் போய் பார்க்கும் போது தண்ணி வத்தி இருந்துச்சு… அந்த மாதிரி இடத்துல கசிஞ்சிருந்தா கதையே முடிந்திருக்கும் என விமர்சனம் செய்தார்.