
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது, கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. வேண்டுகோள் வைத்தோம் என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் 24ஆம் தேதி தலைவருடைய நினைவு நாள். தமிழ்நாடு துயரப்படும் நிலையில்… அந்த டேட்டில் நடத்தாதீங்க. நடிகர் சங்கத்துக்கு அதிகமா நிதியுதவி கொடுத்து, லேண்ட் வாங்கி கொடுத்து….
நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் பல்வேறு வகையில் நடிப்பில் மட்டுமில்லாமல், ஒரு மாபெரும் முதலமைச்சராக தமிழ்நாட்டுல 10 ஆண்டுகளுக்கு மேல ஆண்ட ஒரு முதலமைச்சர்…. அவருடைய நினைவு நாள்ல தயவுசெய்து கலைஞர் 100 விழா நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்த வேண்டாம் அப்படின்னு சொல்லி செவிடன் காதல ஊதின சங்கு மாதிரி எல்லாரும் கேட்டு தான் இருக்காங்க .
திமுக நிர்பந்தத்தில் நீங்க பண்றீங்க….. உண்மையாக சொல்லப்போனால், தலைவருடைய நூற்றாண்டு விழாவை தான் இங்கு கொண்டாடி இருக்கணும். ஏனென்றால் என தலைவர் அவ்வளவு தூரம் நடிகர் சங்கத்துக்கு செய்தவர். அவர் அவருடைய நூற்றாண்டு விழாவுக்கு நீங்கள் எதுவுமே கொண்டாடல… எங்க தலைவர் இன்னைக்கு உலகம் போற்றக்கூடிய புரட்சித் தலைவரா இருக்காரு… எங்க தலைவருடைய நினைவு நாள் 24ஆம் தேதி…. பெரியாருடைய நினைவு தினமும் அன்னைக்குதான வருது… பெரியார் வழி வந்தவங்கன்னு சொல்லிட்டு, நீங்க தானே சொல்லிட்டு இருக்கீங்க… அப்போ பெரியார் வழிவந்த திமுக அப்படின்னா… அப்போ பெரியார் இறந்த நாள்ல உங்களுக்கு சந்தோஷமா ?
தலைவர் இறந்த நாள் உங்களுக்கு சந்தோஷமா ? அன்னைக்கு கொண்டாடுவீங்களா நீங்க ? பெரியார் இறந்த நாள், நினைவு நாள் அன்று இதை கொண்டாடுவது என்பது தமிழ்நாட்டு மக்களும் சரி, தமிழ் நல் உலகமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இனியாவது தயாரிப்பாளர்கள் சங்கமோ, நடிகர் சங்கமோ இந்த கருத்தை ஏற்று தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களினுடைய எதிர்பார்ப்பு…. தயாரிப்பாளர் சங்கமும் சரி, அதே போல நடிகர் சங்கமும் சரி ஸ்டாலினுடைய நிர்பந்தத்திற்கு தயவு செய்து அடிபணியாதீர்கள் என தெரிவித்தார்.