பாகிஸ்தான் ராவல்பிண்டி பகுதியில் சனா யூசப் என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயது ஆகும் நிலையில் அருகில் உள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வந்தார். டிக் டாக் பிரபலமான இந்த சிறுமிக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் இருந்தனர். தோல் பராமரிப்பு பொருள்கள், உணவகங்கள், பாரம்பரியமான ஆடைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை சிறுமி தனது சமூக வலைதள கணக்கில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதனை வழக்கமாக செய்து கொண்டிருந்ததால் கோபமடைந்த அவருடைய தந்தை டிக் டாக் கணக்கை நீக்கும்படி அடிக்கடி எச்சரித்துள்ளார். ஆனால் சிறுமி கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில்  கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுமியின் தந்தை அவரை துப்பாக்கியால் கொலை செய்து விட்டார். அதன் பின் காவல்துறையினரிடம் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தோடு சேர்ந்து நாடகமாடியுள்ளார்.

இதை தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணையின் டிக் டாக் கணக்கை தனது மகள் நீக்க மறுத்ததால் தந்தை சுட்டு கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் தந்தையை கைது செய்து காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.