அமெரிக்காவின் நெவாடா மாநிலம் ரெனோவில் உள்ள ராய் கோம் பள்ளியில் மாற்று உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றிய 62 வயதான தாஜி ஹில்சன் என்பவர், 14 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோக செய்த குற்றச்சாட்டில் ஜூலை 2 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 12 குழந்தைகளுக்கு தாஜ் ஹில்சன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் உறவினர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு தான் இத்தனை ஆண்டுகளாக ஆசிரியை குழந்தைகளிடம் அத்து மீறியது வெளிச்சத்திற்கு வந்தது.
முதலில் ஹில்சன் போதை மருந்துகளை கொடுத்து சிறுமியை தூங்க வைத்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு பெண் உறவினரையும், மேலும் பல குழந்தைகளையும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் மீது பல பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை ஜூலை 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை முற்றிலும் சீரழித்த இந்த சம்பவம், அமெரிக்க கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
