மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் மொகரம் பண்டிகையை கொண்டாட்டத்தின் போது ஒரு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சிலர் ஒரு காரை கிரேனில் தொங்கவிட்டு சுமார் 40 அடி உயரத்திற்கு தூக்கிய நிலையில் பின்னர் அந்த காரை வெடித்து சிதற வைத்தனர்.

 

காருக்குள் பட்டாசுகளை வைத்ததன் மூலம் இது நடந்தது என்பது தெரியவந்துள்ள நிலையில், போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரும் சமூக வலைதள புகழுக்காக இப்படிப்பட்ட விபரீத செயலில் ஈடுபட்ட நிலையில் வீடியோ வைரல் ஆனதால் தற்போது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.