இந்தியாவில் வசிக்கும் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா. இவர் இந்தியாவை சேர்ந்த சிறுவன் ஒருவரை உதட்டில் முத்தமிடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உதட்டில் தலாய்லாமா முத்தம் கொடுத்த நிலையில் பின் தன்னுடைய நாக்கை நீட்டி அதை நக்குமாறு சிறுவனிடம் கூறுகிறார்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தலாய்லாமாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தலாய்லாமா தீபத்தில் பிரிவினை வாதத்தை தூண்டுவதாக சீனா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் அமெரிக்கா, நேபாளம், இந்தியா மற்றும் கனடா உட்பட்ட 30 நாடுகளில் வாழும் சுமார் 1 லட்சம் நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய திபெத்திய நிர்வாகத்தை சீனா அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.