பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. இருந்தாலும் கோர்ட்டின் இத்தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார்?, யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும் என காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். மேலும் அதானியுடன் பிரதமர் மோடி தொடர்பு வைத்திருப்பதாக ராகுல் காந்தி சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவரும், அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர். இதை என்னால் ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும் என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.