வங்கி வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு செம ஹேப்பி நியூஸ் வந்துள்ளது. இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்கான முதன்மை வங்கியான நபார்டு (NABARD), தற்போது 162 காலிப்பணியிடங்களை நிரப்ப அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட்’ (Development Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருந்தால் போதும். 21 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.
ஆரம்பத்திலேயே சுமார் ரூ.32,000 வரை கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜனவரி 17 முதல் பிப்ரவரி 3 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் மொழித்திறன் தேர்வு என மூன்று கட்டங்களாகத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசு வங்கியில் நிரந்தர வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.
