ஐபிஎல் 2024க்கு முன்னதாக மும்பை அணி தக்கவைத்துள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்..

ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து விலகி மும்பை அணிக்கு வருவதாகவும், 15 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், ஹர்திக்கை குஜராத் தக்க வைத்தது. இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

மும்பை அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல் :

ரோஹித் சர்மா (கேட்ச்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

வெளியிடப்பட்ட வீரர்கள்:

முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்.