சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியை பார்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் சென்றிருந்தார். எப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் பொது இடங்களுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து சென்றிருந்தார்.

இதேபோன்று அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து ஐபிஎல் மேட்ச் பார்ப்பதற்கு சென்றிருந்தார். இவர்களுடன் சேர்ந்து முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் ஐபிஎல் போட்டியை கண்டு மகிழ்ந்தார். முதல்வர் ஸ்டாலின் தன் குடும்பத்துடன் ஐபிஎல் மேட்ச் பார்த்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.