சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இடையிலான IPL-ல் போட்டி நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றியடைந்தது. இந்த போட்டியை பார்க்க நடிகர் அஜித்தின் குடும்பமே வந்துள்ளது.

அந்த புகைப்படம் இப்போது சோஷியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு அருகே அஜித் குடும்பம் உட்கார்ந்து மேட்ச் பார்த்திருக்கின்றனர். அதோடு தனுஷ், பிரியங்கா மோகன், மேகா ஆகாஷ் உட்பட பலரும் CSK போட்டியை காண வந்திருக்கின்றனர்.