டைரக்டர் சிவா இயக்கத்தில் சூர்யா இப்போது நடிக்கும் படம் “கங்குவா”. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர திரைப்படமாக 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

அதன்பின் “கங்குவா” படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இந்த படத்தின் சூட்டிங் கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடந்து வந்தது. இப்போது படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புது மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.