நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தனர். அதில், திரையில் சூர்யாவுக்கு மிகவும் பொருத்தமான ஜோடி யார் என்று ஜோதிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜோதிகா, நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன், மௌனம் பேசியது போன்ற படங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த லைலா மட்டுமே அவருக்கு பொருத்தமான ஜோடிஎன்று கூறியுள்ளார்.

அதே சமயம் காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். என்னுடைய கணவராக இருந்தாலும் திரையில் ஒரு நடிகராக அவரை ரசிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.