IPL 2023 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  ஹைதராபாத் உடனான ஐபிஎல் போட்டியில் சென்னை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வென்றது. டி20 கிரிக்கெட்டில் புது வரலாற்றை தனதாக்கியுள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. நேற்றைய ஹைதராபாத் உடனான போட்டியில் விளையாடி விக்கெட் எடுத்ததன் மூலம், ஒரு விக்கெட் கீப்பராக டி20ல் அதிக விக்கெட் எடுத்த வீரராக தோனி மாறியுள்ளார்.

208 விக்கெட்டுகளுடன் இவர் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக 207 உடன் குவிண்டன் அ டி காக், 205 உடன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பதிவிட்ட ஹர்பஜன் சிங், “ஆறு தான் கடல்ல வந்து சேருது. கடல் என்னைக்கும் ஆற தேடி போறது இல்லை. வெற்றின்ற ஆறு சென்னைன்ற 7 கடல்ல வந்து சேர்ந்திருச்சு. பிரியாணிக்கு ஹைதராபாத் உலக பேமஸ். ஆனா எல்லாரோடா ஆல் டைம் பேவரைட் என்னவோ சென்னை இட்லி, சாம்பார் தான்” என குறிப்பிட்டுள்ளது வைரலாகியுள்ளது.