இந்தியாவின் பல இடங்களில் 16-வது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. IPL போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும். இந்நிலையில் IPL தொடரில் லக்னோ அணியில் புதியதாக சூர்யான்ஷ் ஷெட்ஜ் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக லக்னோ அணியில் இருந்து உனத்கட் வெளியேறிவிட்டார்.

இதையடுத்து அவருக்குப் பதில் மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷை லக்னோ அணி வாங்கி இருக்கிறது. 20 லட்சம் ரூபாய்கு லக்னோ அணி அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் 3 இடங்களில் முறையே குஜராத், சென்னை மற்றும் லக்னோ அணிகள் இடம்பெற்றுள்ளது.