16வது IPL தொடரில் 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா-லக்னோ அணியானது மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் லக்னோ அணியானது களமிறங்கியது. கொல்கத்தா அணியினரின் அபார பந்து வீச்சில் லக்னோ அணி சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன் காரணமாக 73 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின் ஆயுஷ் பதோனி உடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்த சூழலில், பதோனி 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 58 ரன்னில் வெளியேறினார். கடைசியில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து உள்ளது. கொல்கத்தா சார்பாக ஷர்துல் தாக்குர், வைபவ் அரோரா, சுனில் நரைன் போன்றோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதன்பின் 177 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா களம் இறங்கியது. இதில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த ரிங்கு சிங் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடினார்.

அதனை தொடர்ந்து ஜாசன் ராய் 45 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 24 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ரன்களும், நிதிஷ் ராணா 8 ரன்களும், ஆண்டிரே ரூசல் 7 ரன்களும், ஷார்துல் தகூர் 3 ரன்களும், சுனில் நரைன் ஒரு ரன்னும் அடித்தனர். கடைசியில் களமிறங்கிய வைபவ் அரோரா ஒரு ரன் மட்டும் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணியானது 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் வாயிலாக ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணியானது வெற்றியடைந்தது.