16-வது IPL தொடரில் 67வது லீக் போட்டியில் டெல்லி-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிக் கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியானது பேட்டிங் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் அடித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சிவம் துபே, கான்வே ஜோடி அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த சூழலில், ருதுராஜ் 79 ரன்களில் அவுட்டானார்.

இதையடுத்து கான்வே 87 ரன்னில் வெளியேறிவிட்டார். அதன்பின் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. சென்னை அணியின் துல்லியமான பந்து வீச்சில் டெல்லி அணி சிக்கியது. அதாவது, 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடினார். அதேபோல் வார்னர் 87 ரனனில் ஆட்டம் இழந்தார். கடைசியில் டெல்லி அணியானது 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் வாயிலாக 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த சென்னை அணி பிளே ஆப் சுற்றையும் உறுதிசெய்தது.