உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சமூக வலைதள நட்பு காரணமாக 16 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் பாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சீத்தல் என்ற சிறுமி, கடந்த 13-ஆம் தேதி முதல் மாயமான நிலையில், சில நாட்களுக்குப் பிறகு ரயில் தண்டவாளம் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அன்ஷு கௌதம் என்பவர் திருமண ஆசை காட்டி சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அன்ஷு கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சிறுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அடையாளத்தை மறைக்க உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளனர்.
இந்த கொடூரக் கொலை தொடர்பாக அன்ஷு கௌதம், ஆஷிக், வைபவ் மற்றும் ரிஷு ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
