மும்பை விக்ரோளி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத ஒலிபெருக்கி சரிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, முறையாகப் பொருத்தப்படாத அந்தப் பெரிய ஸ்பீக்கர் திடீரென சிறுமியின் மீது விழுந்தது.
மேலும் இதில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கிறது.
A large speaker collapsed fell directly onto a 3-year-old girl, causing fatal injuries. The child was critically injured on the spot and was immediately rushed to a nearby hospital, where she was declared dead despite medical efforts.Vikhroli East, Mumbai #CCTV pic.twitter.com/EHbWDVD0AA
— NextMinute News (@nextminutenews7) January 27, 2026
“>
இந்தச் சம்பவம் முழுக்க முழுக்க நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்ததாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல், மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் கனமான ஒலிபெருக்கியை அத்தையை கவனக்குறைவாக வைத்ததே இந்த மரணத்திற்கு காரணம் எனப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பிஞ்சு உயிரின் இழப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
