
செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய தினம் பார்த்தீர்கள் என்றால் ? காவேரி பிரச்சனை மிக மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கு. குறிப்பாக இன்றைய தினம் கர்நாடகாவில் பந்த் என்று அறிவித்திருக்கிறார்கள்.
நான் அண்ணாமலையை பார்த்து கேட்க விரும்புவது… தமிழ்நாட்டில் இவ்வளவு தூரம் நீட்டி முழங்கக் கூடிய அண்ணாமலை, ஒரு அகில இந்திய கட்சியாக இருக்கக்கூடிய பாஜக…. கர்நாடகத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று சொல்லி, நீங்களும் உங்களுடைய கூட்டணி கட்சிகளும் சேர்ந்து பந்த் நடத்துகிறீர்களே என்ன நியாயமா ?
தமிழ்நாட்டுக்கு நாங்க என்ன பிச்சை கேட்கிறோமா ? நாங்க என்ன சலுகை கேட்கிறோமா ? 50 ஆண்டுகளுக்கு மேல வழக்கு நடத்தி, நடுவர் மன்ற தீர்ப்பு சொல்லி, அதன் மீது உச்சநீதிமன்றத்திற்கு போய், உச்சநீதிமன்றம் 7 ஆண்டு காலம், 8 காலம் விசாரணை நடத்தி…. கடைசியா உச்சநீதிமன்றம் 2018ல் தீர்ப்பு வழங்கிருக்கிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய தண்ணீர் கொடுக்கக்கூடிய தண்ணீரை கொடுங்க என்றுதான் நாம் கேட்கிறோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என சொல்லி, ஒரு கட்சி போராடுதுனா அது எப்படி அரசியல் சாசனமாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க கூடாது என்று சொன்னால் ? நியாயமா அது… அப்போ யாரு வேண்டுமானாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறலாம் இல்ல… நீதிமன்ற தீர்ப்பை மீறலாம் இல்ல…. எனவே அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டுக்கு விரோதமாக இன்றைக்கு கர்நாடக மாநிலத்தில் இப்படி செய்கிறார்கள்.
அது கூட பாத்திங்களா… காவிரி மேலாண்மை வாரியம், காவேரி ஒழுங்காற்று குழு போன்றவைகள் எல்லாம் தீர்மானிச்சு….. ஏற்கனவே 12, 500 அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்புறம் 10,000 அடி குறைச்சாங்க. அப்புறம் 5,000 அடி என்று நினைத்தார்கள். நேற்றைய முன்தினம் ஒழுங்காற்று குழு 3000 அடி என்று கொடுத்திருக்கிறார்கள். நான் என்ன கேட்கிறேன் என்றால் ? கர்நாடக அணைகளில் இருக்கிற தண்ணீரை பார்க்கிற போது அரசாங்கமே சொல்கிறது…. 52% தண்ணீர் இப்போ இருக்கு என சொல்கிறார்கள்.
அப்போ பற்றாக்குறை என்பது ஏற்கனவே இருக்க வேண்டியதில் 48%. 52% நீர் இருப்பு அவங்க கிட்ட இருக்கு. அது மட்டுமல்ல…. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் 27 சதவீதம் தான் குறைவாக பெய்துள்ளது. 27% தான் குறைவு என்பது பெரிய குறைவு கிடையாது. ஆனால் என்ன சூட்சமாக செய்கிறார்கள்… 27% தான் மழை குறைந்து பெய்திருக்கின்றது.
மீதி 73% அந்த தண்ணீரை நீங்க நீர் தேக்கங்களில் தேக்குவதற்கு பதிலாக, அதை மறைமுகமாக எடுத்து வேறு சில ஏரிகளில் கொண்டு தேக்கி வைத்து, நீங்க பயன்படுத்துவதனால் அப்போ 27% குறைவு என சொன்னால் ? அணைகளில் 27% தானே குறைச்சி இருக்கணும்.
ஏன் 48% குறையுது. அப்போ மீதி இருக்கிற தண்ணி எல்லாம் மறைமுகமாக… சைலண்டா… சத்தம் போடாம நீங்க எடுத்துட்டு வேற இடத்துக்கு பயன்படுத்துறீங்க. நீர்நிலை தேக்கங்களில் 52% இருக்குன்னு சொல்லுறீங்க. நீரை எடுத்து பயன்படுத்திட்டு, அணைகளில் தண்ணீர் இல்ல… நாங்க தண்ணி கொடுக்க மாட்டேம்னு சொன்னா….. எப்படி ஏற்றுக் கொள்வது?என தெரிவித்தார்.