செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் ஆட்சிக்கு வந்தால் நான் ஏன் தண்ணீருக்கு அவன்கிட்ட கையேந்த போறேன். அவன்கிட்ட 150 TMC…  190 TMC தான்கேட்டுட்டு இருக்கேன். 2001TMC தண்ணீரை  கடல்ல கலக்க விடுறேன். நீ 5000 ஏக்கர்ல ஏர்போர்ட் கட்டுறதுக்கு…..  5000 ஏக்கர்ல ஏரியை  வெட்டிட்டு போக வேண்டியது தானே…

எனக்கு என் பாட்டன் அரசேந்திர சோழன் கட்டிய, வீர நாராயணன் ஏரி இருக்கு… சிறுகடல்ல 16 கிலோ மீட்டர். அத தூர்வாரி பராமரிச்சி,  ஒவ்வொரு ஆண்டும் கடலூர்ல பெய்கின்ற வெல்ல நீரை… மழை நீரை… சேமிச்சோம்னா நேரா காவாய்…..  அல்லது பெருங்குழாய் ராட்சச குழாயில கொண்டு வந்து இறக்கிடுவேன்  காவேரி படுக்கையில….. 

60 வருசமா ஆண்டுட்டு….. அவன்ட போய் கையேந்திட்டு…  உனக்கு இந்த பிரச்சனை தீர்க்க பட கூடாது, தீர்த்துட்டா உனக்கு அரசியல் இல்ல. அவனுக்கு தமிழனுக்கு தண்ணிர் குடுத்துட்டா அவனுக்கு அரசியல் இல்ல. காவிரில உரிய நதி நீர் வாங்கிட்டா இவனுக்கு அரசியல் இல்ல.எனக்கு  போதுமான அளவு தண்ணீ இருக்கு. நான் சேமித்து காட்டுறேன்…

தண்ணீரின் தேவையில எவன்டையும் கையேந்தாம, பாண்டியாறு புன்னம்பூழா மேல ஒரு அணைய போட்டேன்ன்னு  வச்சிக்கோங்க…. அவனே திறந்துருவான் முல்லைப்பெரியாற்று தண்ணீரை என தெரிவித்தார்.