இந்தியன் 2 திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ்- ஐ நெட்பிளிக்ஸ் நிறுவனம்  பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோலிவுட் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வரக்கூடிய திரைப்படம் இந்தியன் 2.  இப்படத்திற்கான படப்பிடிப்புகள் இன்னும் நடைபெற்று வரும் சூழ்நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.  இதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்திற்கான டிஜிட்டல் raits- ஐ நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,

சுமார் ரூ220 கோடி மதிப்புக்கு இந்தியன் 2 திரைப்படத்திற்கான அனைத்து மொழிகளுக்கான டிஜிட்டல் ரைட்ஸை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி பார்க்கையில், படத்திற்கான மொத்த பட்ஜெட்- இல் (ரூபாய் 250 கோடி) 98% நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமே கொடுத்து வாங்கியுள்ளது என்றால், திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு எவ்வளவு பெரிய லாபம் ஈட்டும்? என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழ் சினிமாவிலேயே அதிக அளவிலான வசூல் சாதனை படைக்கும் படமாக இந்தியன் 2 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.