ஆறு மொழிகளில் கங்குவா திரைப்படத்திற்கான Glimpse  வீடியோ வெளியாகவுள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. 

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் கங்குவா திரைப்படத்திற்கான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,  நாளை சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா திரைப்படத்திற்கான Glimpse  வீடியோவை வெளியிடப்பட படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், வீடியோ குறித்து படக்குழு அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வருகிறது.அதன்படி, 

ஒரே வீடியோ லிங்க் மூலம் கங்குவா Glimpse  வீடியோ ஆறு மொழிகளை உள்ளடக்கிய வீடியோ தொகுப்பாக இருக்கும் என கூறியுள்ளது. youtube செட்டிங்கில் சென்று ஆடியோ track வசதியில் 6 மொழிகளில் உங்களுக்கு  பிடித்த மொழியை தேர்வு செய்து பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 3D  தொழில்நுட்பத்தை மையமாக கொண்ட  திரைப்படம் என்பதால், உலக அளவில் படத்தை மார்க்கெட்டிங் செய்ய பட குழு எடுத்திருக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.