உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 

ஜூலை 21ஆம் தேதி உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்த இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்தன. அதில் ஒன்று பார்பி மற்றொன்று ஓபன் ஹெய்மர். திரைக்கு வருவதற்கு முன்பு வரை பார்பி திரைப்படத்தை விட ஓபன் ஹெய்மர்  திரைப்படத்தின்  மீதான எதிர்பார்ப்பு தான் அதிகம் இருப்பது போல் தோற்றமிருந்தது. ஆனால், அதை முறியடித்து முதல் நாள் வசூலில் உலக அளவில் பார்பி திரைப்படம் $66 மில்லியன் வசூலை ஈட்டி ஓபன் ஹெய்மரை ($29 மில்லியன்)  பாக்ஸ் ஆபிஸில் தோற்கடித்துள்ளது.

இது உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்.  ஆனால் இந்தியாவில் ஓபன் ஹெய்மர் திரைப்படம் 13 கோடியும் பார்பி திரைப்படம் நான்கு கோடியும் முதல் நாளில் பெற்று பார்பியை  இந்தியாவில் ஓபன் ஹெய்மர் தோற்கடித்துள்ளது. டார்க் நைட் திரைப்படத்திற்கு பின்பு கிறிஸ்டோபர் நோலன்  அவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் அதை உண்மையாக்கும் விதமாக ஓபன் ஹெய்மர் திரைப்படத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.