செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் திருச்சிக்கு வந்து பல்வேறு திட்டங்களில் தொடக்க விழாவிற்கும், நிறைவு விழாவிற்கும், வந்திருக்கிறார். மரியாதை நிமித்தமாக மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு கேட்டிருந்தேன். வரவேற்பதற்கும், சென்ட் ஆப் பண்றதுக்கும் வாய்ப்பு தந்தாரு. மனநிறையோடு அதை பண்ணி முடித்தேன். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வாய்ப்புகள் வரும்போது உறுதியாக டெல்லி செல்வோம்.

பொதுவாகவே, நான் சந்திக்கும்போதெல்லாம், வாழ்த்து கடிதத்தை அவரிடம் தருவேன். நலமுடன் இருக்க வேண்டும் என்ற வாழ்த்துக் கடிதம் கொடுத்தேன். நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய நிலைப்பட்டை நான் பல கூட்டங்களில் ஒவ்வொரு மாவட்ட கூட்டம் நடந்து முடிந்து, செய்தியாளர்கள்,  பத்திரிகை – தொலைக்காட்சிகளை பார்க்கும்போது எல்லாம்  10 ஆண்டு காலம் மாண்புமிகு பாரத பிரதமர் இந்திய திருநாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுதில் இருந்து பல்வேறு திட்டங்கள், தொலைநோக்கு பார்வையுடைய திட்டங்களை, இங்கே ஆரம்பித்து  அவரே தொடங்கி வைத்திருக்கிறார்.

உலக நாடுகளில், கிட்டத்தட்ட உலகத்தில் இருக்கிற 80 சதவீத நாடுகள் நம்முடைய இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பிரம்மித்து நிற்கிறது. பாரத பிரதமருடைய கடமையை, அவருடைய செயல் திறன், அவருடைய சுறுசுறுப்பு, அவருடைய பணி, திட்டமிடுதல், முடிக்கின்ற பணிகளை பார்த்து, உதாரணத்திற்கு சந்திராயன் சென்றதிலிருந்து, நம்முடைய இந்திய திருநாடு மாண்புமிகு, திரு நரேந்திர மோடிஜி அவர்களால், உச்சத்திற்கு தொடுகின்ற நிலை இப்போது இருக்கிறது என தெரிவித்தார்.