நாகலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி பா.ஜ.க கூட்டணி முறையே 40,19 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இதில் நாகா மக்கள் முன்னணி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மேலும் தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் போன்றவை தலா 12 வேட்பாளர்களை களம் இறங்கியது. நாகலாந்தில் ஹேக்கானி ஜக்காலு, சால்ஹூட்டூ க்ரூஸ்,ஹகாலி செமா மற்றும் ரோஸி தாம்சன் ஆகிய நான்கு பெண் வேட்பாளர்கள் களமிறங்கினர்.
அதில் திமாபூர் மூன்று தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜக்காலு வெற்றி பெற்றுள்ளார். நாகலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் சட்டப்பேரவை உறுப்பினராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும். ஹேக்கானி ஜக்காலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.