ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய காஷ்மீரில் கந்தபால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனா மார்க்கின் பவன்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நான்கு வீடுகள் இடிந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

அந்த பகுதிகளில் மாவட்ட காவல்துறை , மாநில பேரிடர் மீட்பு நிதியம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். இதனை அடுத்து நிலச்சரிவில் வீடுகளை இழந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.