திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் பதார்த்தங்களால் அதனுடைய சுவை இன்னும் அதிகமாக காணப்படும். வேறு எங்கும் இது போன்று தயாரிப்பது மிக கடினம். இதனால் இதனுடைய மவுசு அதிகம்.

இந்நிலையில் திருப்பதி கோவிலில் அளவுக்கு அதிகமாக லட்டுகள் வாங்கும் மக்களை தடுக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தரிசனத்துக்கு உள்ளே செல்லும்போதே முகத்தை ஸ்கேன் செய்துகொள்ளும் கருவி ஒரு முகத்துக்கு ஒரு லட்டு என்ற விகிதத்தில் மட்டுமே விநியோகம் செய்ய உள்ளது. இந்த உ நடைமுறையினை திருப்பதி தேவஸ்தானம் மார்ச் 1 முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த உள்ளது.