நாடு முழுவதும் பெரு நகரங்களில் பைக் டாக்சி சேவைகளானது அண்மை காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இரண்டு சக்கர வாகன டாக்சி சேவைகளை தடைசெய்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு தடையை மீறினால் ரூபாய். 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வணிக பைக் டாக்ஸி சேவைகளை போக்குவரத்துத்துறை தடை செய்துள்ளது. வாடகை (அ) வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றி செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் மீறலாக கருதப்படும். தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமத்தையும் 3 மாதங்களுக்கு இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதனை தொடர்ந்து பைக் டாக்சிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்ய இயலாது என அரசு விளக்கமளித்துள்ளது.