ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது. இது அடுத்து பொது மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

இதேபோல் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். அது போன்று நிலைமை ஆந்திரா, தெலுங்கானாவில் நடந்து விடுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.