ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகளின் மேல் மக்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. ஏனென்றால் ரூபாய் நோட்டுகளில் எழுதும் போது அவை ரூபாய் நோட்டுகளின் வாழ்நாளை குறைத்துவிடும்.

இந்நிலையில் ரூபாய் நோட்டுகள் எந்த நிலையில் இருந்தால் செல்லும், எப்போது செல்லாது என்று ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், ரூபாய் நோட்டு முனையில் இருந்து நடு வரை கிழிந்திருந்தால் செல்லாது. ரூபாய் நோட்டில் இருந்த கிராபிக்ஸ் அழிந்திருந்தாலோ, மாறி இருந்தாலோ செல்லாது. ரூபாய் நோட்டின் பெயிண்ட் கலர் மங்கி இருந்தால் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.