தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 3 வருடங்களில் என் மீதும் எங்கள் பாஜகவினர் மீதும் உண்மையை பேசியதற்காக ஏராளமான பொய் வழக்குகளை திமுக அரசு போட்டுள்ளது. தற்போதும் என் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளது. என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. என் மீது உண்மையை பேசியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் போதை பொருள் வியாபாரிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கிய திமுகவின் உண்மை முகம் மக்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.