திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை தாமதம் இன்றி வழங்கி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி திராவிட மாடல அரசு பொறுப்பேற்ற முதல் இதனால் வரை 92 பகுதிகளில் 3197 கோடி மதிப்பில் 28,724 அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1833 மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கு விற்பனை பத்திரங்கள் அரசு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டம் மூலம் மூன்று ஆண்டுகளில் 1, 68,495 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல், 117 திட்டப் பகுதிகளில் 76 ஆயிரத்து 434 அடுக்குமாடி குடியிருப்புகளை பழுதை நீக்குதல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.