கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முத்துராமலிங்க தேவர் அவர்கள் அம்மனை பற்றி தவறாக பேசியவர்கள் ரத்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் என தெரிவித்ததாக இவர் கூற அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனவும், அவர் பொய்யான தகவலை பரப்பியதாகவும் பியூஸ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இதற்கு அரசின் அனுமதியை பெற வேண்டும் என தீர்ப்பளித்தது. அதன்படி, தமிழக அரசு இதை தமிழக ஆளுநருக்கு ஒப்புதல் அளிக்க வேண்டி அனுப்பி வைத்தது. தற்போது இதற்கு ஆளுநர் ரவி அவர்களும் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் அடுத்த கட்டம் விசாரணைக்கு வரும்போது அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
