பெற்ற தகப்பனைக் கொடூரமான முறையில் படுகொலை செய்து, அவரது உடலை வீட்டிலேயே புதைத்து மூடிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெற்றவர என்றும் பாராமல், தந்தையின் கால்களைப் பலவந்தமாக முறித்துத் தோள் வரை மடக்கி, ஒரு சிறிய இடத்தில் உடலைத் திணித்துப் புதைத்த மகனின் கொடூர மனநிலை அப்பகுதி மக்களை உறைந்துபோகச் செய்துள்ளது.
பாச பிணைப்புகளையும் மனிதநேயத்தையும் சுக்குநூறாக உடைத்தெறிந்த இந்தச் சம்பவம், மனித மிருகத்தனத்தின் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது. கொலை நடந்து சில நாட்கள் கழித்து, அந்த அறையிலிருந்து சகிக்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசத் தொடங்கிய பிறகே இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
துர்நாற்றத்தின் வீரியம் தாங்க முடியாமல் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மூடிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கே வீசிய நாற்றத்தில் சில நிமிடங்கள் நிற்கக்கூட முடியாமல் திணறினர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அறையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் புதிதாகப் பள்ளம் தோண்டி மூடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தோண்டிப் பார்த்தபோது, கால்கள் கொடூரமாக முறிக்கப்பட்டுத் தோள் பகுதி வரை வளைக்கப்பட்ட நிலையில் தந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட மகனைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துத் தகராறு அல்லது குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த கொடூரக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
